12-வது ஐபிஎல் போட்டி இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் ஹர்பஜன் சிங் தமிழ்நாட்டுக்கு வந்ததை தமிழில் ட்விட் செய்துள்ளார்.
12 -ஆவது ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி வரும் மார்ச் 23ம் தேதி தொடங்க உள்ள நிலையில் முதல் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் தொடங்குகிறது. இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை எதிர்த்து விளையாட உள்ளது.
இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வந்த ஹர்பஜன் சிங் கடந்த ஆண்டு முதல் சென்னை அணிக்கு வந்ததும் ரசிகர்களை கவரும் வகையில் ட்விட்டரில் தமிழ்நாட்டில் அதிகமாக கொண்டாடப்படும் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளுக்கும், அவ்வப்போது தமிழ் நாட்டின் பிரச்சனையை பற்றியும் தமிழில் ட்விட் செய்துள்ளார்.
பேரன்பிற்கும்,பெருமதிப்பிற்குரிய என்னருமை @ChennaiIPL ரசிகர்களே மீண்டும் @ipl ல் பங்கேற்க தங்க தமிழ்தேசத்திற்கு வந்துவிட்டேன்.ஒரு ராணுவ வீரன் வருடத்திற்கு ஒரு முறை தன் சொந்தங்களை பார்க்க ஆனந்த கண்ணீருடன் வருவான் அதே
உணர்வு தான் என்னுள் இப்போது #WhistlePodu @CSKFansOfficial pic.twitter.com/zkyKiP0ToN— Harbhajan Turbanator (@harbhajan_singh) March 16, 2019
இந்நிலையில் தமிழ் நாட்டுக்கு வந்ததை ஹர்பஜன்சிங் தமிழில் ட்விட்டரில் பேரன்பிற்கும், பெருமதிப்பிற்குரிய என்னருமை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்களே மீண்டும் ஐ.பி.எல் போட்டியில் பங்கேற்க தங்க தமிழ்தேசத்திற்கு வந்துவிட்டேன்.ஒரு ராணுவ வீரன் வருடத்திற்கு ஒரு முறை தன் சொந்தங்களை பார்க்க ஆனந்த கண்ணீருடன் வருவான் அதே உணர்வு தான் என்னுள் இப்போது”என்று தெரிவித்துள்ளார்.