Categories
கிரிக்கெட் விளையாட்டு

மீண்டும் நிரூபித்து காட்டிய தல தோனி……. திக் திக் நிமிடத்தில் சென்னை அணி த்ரில் வெற்றி…!!

ராஜஸ்தான் அணிக்கு எதிரான  ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் இழந்து 155 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது 

ஐ.பி.எல் 24 வது லீக் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ்  மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடியது . இப்போட்டி  ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் நேற்று இரவு 8 மணிக்கு தொடங்கியது. இந்நிலையில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ஜாஸ் பட்லரும், அஜிங்கியே ரஹானேவும் களமிறங்கினர்.இருவரும்  நல்ல தொடக்கம் கொடுத்த நிலையில்  ரஹானே 14 (11) ரன்னிலும்,  ஜாஸ் பட்லரும்  23 (10) ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

அதன் பின் வந்த சஞ்சு சாம்சன் 6, த்ருப்பாதி 10,  ஸ்டீவ் ஸ்மித் 15, ரியான் பராக் 16,  ஸ்டோக்ஸ் அவர் பங்குக்கு 28 ரன்களும், எடுத்தனர்.  கடைசியில் ஜோப்ரா ஆர்ச்சர் 13* (12), ஷ்ரேயஸ் கோபால் 19* (7) ரன்களும் எடுக்க ராஜஸ்தான் அணி  இறுதியில் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழந்து 151 ரன்கள் குவித்தது. சென்னை அணியில் அதிகபட்சமாக தீபக் சாஹர், ஷர்த்துள் தாக்கூர், ஜடேஜா ஆகியோர் 2 விக்கெட்டுகளும், மிச்சேல் சான்ட்னர் 1 விக்கெட்டும் வீழ்த்தினார்.

இதையடுத்து 152 ரன்கள் இலக்கை நோக்கி சென்னை அணியின் தொடக்க வீரர்களாக சேன் வாட்சனும், பாப் டுப்லெஸியும் களமிறங்கினர்.  முதல் ஓவரில் வாட்சன் 0 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன் பின் வந்த ரெய்னா 4, பாப் டுப்லெஸி 7, கேதார் ஜாதவ் 1  என அடுத்தடுத்து  ஆட்டமிழந்ததால் சென்னை அணி 6 ஓவரில் 24/4 விக்கெட் இழந்து தடுமாறியது.

அதன் பின் கேப்டன் தோனியும், அம்பத்தி ராயுடுவும் ஜோடி சேர்ந்தனர். இருவரும் சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இந்த ஜோடியை ராஜஸ்தானால் பிரிக்க முடியவில்லை. 18 வது ஓவரில் ராயுடு 57 (47) ரன்னில் ஆட்டமிழந்தார். அதன் பின் ஜடேஜா களமிறங்கினார்.

இறுதியில் கடைசி ஓவரில் 18 ரன்கள் தேவைப்பட பென் ஸ்டோக்ஸ் வீசிய 1 பந்தை ஜடேஜா சிக்ஸர் அடித்தார். 2வது பந்து நோபால் அதில் 1 ரன்கள் எடுக்க அடுத்த பந்தில் தோனி 58 (43) ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பின் மிச்சேல் சான்ட்னர் களமிறங்க  4 பந்தில் 10 ரன்கள்  வெற்றிக்கு தேவைப்பட 2,  2, 2 ரன்கள் எடுக்க இறுதி பந்தில் 4 ரன்கள் தேவைப்பட அந்த பந்து ஒயிடாக இறுதியில் 1 பந்தில் 3 ரன்கள் தேவைப்பட அரங்கத்தில் இருந்த அனைவரும் பரபரப்புடன் இருந்தனர். அந்த பந்தை சாண்ட்னர் சிக்ஸர் அடித்தார்.

இதனால் சென்னை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழந்து 155 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. மிச்சேல் சான்ட்னர் 10* (3) ரன்களிலும், ஜடேஜா 9* (4) ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். ராஜஸ்தான் அணியில் அதிகபட்சமாக பென் ஸ்டோக்ஸ் 2 விக்கெட்டுகளும், குல்கர்னி, உனத்கட், ஜோப்ரா ஆர்ச்சர் ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். சென்னை அணி இந்த வெற்றியின் மூலம் 12 புள்ளிகள் பெற்று மீண்டும் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறது.

 

 

Categories

Tech |