Categories
கிரிக்கெட் விளையாட்டு

பிராவோ அபார பந்து வீச்சு…… ஹாட்ரிக் வெற்றியை ருசித்த சென்னை…..!!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராஜஸ்தான் அணியை  8 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.  

12வது  ஐ.பி.எல் தொடரின் 12-ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்  மற்றும் ராயல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதியது . இந்த போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சிதம்பரம்  ஸ்டேடியத்தில் நேற்று இரவு 8 மணிக்கு தொடங்கியது . இந்த போட்டியில் டாஸ் வெற்ற ராஜஸ்தான் அணி கேப்டன் ரஹானே பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழந்து 175 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் டோனி 46 பந்துகளில் 75 ரன்கள் (4 சிக்ஸர், 4 பவுண்டரி)  விளாசி ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். ரெய்னா 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பிராவோ அவர் பங்குக்கு 16 பந்துகளில் 27 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். மற்ற வீரர்கள் வாட்சன் 13, கேதார் ஜாதவ் 8, அம்பத்தி ராயுடு 1 ரன்களும் எடுத்தனர்.

இதையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணியில் தொடக்க வீரர்களான அஜிங்கியா ரஹானேவும், ஜாஸ் பட்லரும் களமிறங்கினர்.  முதல் ஓவரில் ரஹானே 0 ரன்னில் ஆட்டமிழந்தார். அதை தொடர்ந்து சாம்சன்  8 ரன்னிலும், ஜாஸ் பட்லர் 6 ரன்னில் ஆட்டமிழந்தார். இதையடுத்து ராகுல் த்ரிப்பாதி 39 (24) ரன்னில் ஆட்டமிழந்தார். அதன் பின்  ஸ்டீவ் ஸ்மித்தும், பென் ஸ்டோக்ஸும் சிறப்பாக விளையாடி ரன்னை உயர்த்தினர்.

அதன் பின் ஸ்டீவ் ஸ்மித் 28 (30) ரன்னிலும், கிருஷ்ணப்பா கெளதம் 9 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். கடைசியில் பென் ஸ்டோக்ஸும், ஜோப்ரா ஆர்ச்சரும் சற்று அதிரடி காட்டி மிரட்டினர். இறுதியில் கடைசி ஓவரில் வெற்றிக்கு  12 ரன்கள் தேவைப்பட அந்த ஓவரை பிராவோ வீசினார். முதல் பந்திலேயே பென் ஸ்டோக்ஸ் 26 பந்துகளில் 46 ரன்கள் (3 சிக்ஸர் 1 பவுண்டரி),   ரெய்னாவிடம் கேட்ச் கொடுத்து நடையை கட்டினார். இதையடுத்து வந்த கோபாலும், ஆர்ச்சரும் அந்த ஓவரில் 3 ரன்கள் மட்டுமே  எடுத்தனர்.

இறுதியில் ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் குவித்தது. இதனால்  8 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது. ஜோப்ரா ஆர்ச்சர் 24* (11) ரன்னிலும், கோபால் 0 *ரன்னிலும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். சென்னை அணியில் தீபக் சாஹர், ஷர்துல் தாகூர், இம்ரான் தாஹிர், பிராவோ ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

 

Categories

Tech |