Categories
கிரிக்கெட் விளையாட்டு

சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணியை வென்றது…!!

சென்னை அணி 19.4ஓவர்களில் 4விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது  

IPL 5 ஆவது லீக் போட்டியில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகளும் விளையாடியாது. டெல்லியில் உள்ள  பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.

டெல்லி அணியில் ஷிகர் தவானை தவிர மற்ற வீரர்கள் நிலைத்து நின்று ஆடாத நிலையில் டெல்லி கேப்பிடல் அணி அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 147 ரன் எடுத்தது. அதிகபட்சமாக ஷிகார் தவான்  51 ரன் எடுத்தார் .சென்னை அணியில் சார்பில் அதிகபட்சமாக பிராவோ 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்

 

பின்னர் 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணிக்கு   தொடக்கமுதலே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரர் அம்பத்தி ராயுடு இஷாந்த் சர்மா பந்து வீச்சில் 5 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இதையடுத்து களமிறங்கிய ரெய்னாவும்,  சேன் வாட்சனுடன் ஜோடி சேர்ந்து சிறப்பாக விளையாடி ரன் சேர்த்தது. அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட சேன்வாட்சன் 44  ரன்களில் ஆட்டமிழக்க அவரை தொடர்ந்து ரெய்னாவும் 30 ரன்னில் நடையை காட்டினார்.
இதையடுத்து வந்த கேதார் ஜாதவும், டோனியும் பொறுமையாக விளையாடி கடைசி வரை கொண்டு சென்றனர். கடைசி ஓவரில் சென்னை  வெற்றிக்கு 2 ரன்கள் தேவைப்பட ரபாடா வீசிய  அந்த ஓவரில் முதல்  பந்தில்  கேதார் ஜாதவ்  27 ரன்களில்  ஆட்டமிழந்தார். இதையடுத்து களமிறங்கிய பிராவோ  2வது மற்றும் 3 பந்துகளில் ரன்கள் ஏதும் எடுக்காததால் ஆட்டத்தில் பரபரப்பு நிலவியது.
இதையடுத்து 4வது பந்தில் பவுண்டரியுடன் வெற்றியை வசமாக்கினார். சென்னை அணி 19.4 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. டோனி  32* , பிராவோ 4* ரன்களுடன் ஆட்டமிழக்காமல் கடைசி வரை களத்தில் இருந்தனர். டெல்லி அணியில் அதிக பட்சமாக அமித் மிஸ்ரா 2 விக்கெட் வீழ்த்தினார்.

Categories

Tech |