Categories
மாநில செய்திகள்

சென்னை திருமழிசை காய்கறி சந்தையில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர், எஸ்.பி. திடீர் ஆய்வு!

திருமழிசை தற்காலிக காய்கறி சந்தையில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி, திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி. அரவிந்தன் ஆகியோர் ஆய்வு செய்து வருகின்றனர்.

தமிழகத்தில் கோயம்பேடு தொடர்புகள் மூலம் சென்னையில் உள்ள பகுதிகளிலும், பிற மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. இதனால் கோயம்பேடு சந்தையானது கடந்த 5ம் தேதி மூடப்பட்டுள்ள நிலையில் திருமழிசையில் தற்காலிக சந்தை அமைக்க திட்டமிடப்பட்டது.

இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்ற நிலையில் மே 11ம் தேதி திறக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்தது.தற்காலிகமாக 200 கடைகள் மொத்த விற்பனை காய்கறி வியாபாரிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அங்கு சமூக விலகல் முறையாக கடைபிடிக்கப்படவில்லை என புகார் எழுந்தது. இதனை தொடர்ந்து திருமழிசை தற்காலிக காய்கறி சந்தையில்

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி, திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி. அரவிந்தன் ஆகியோர் அங்கு திடீர் ஆய்வு மேற்கொண்டனர். சந்தையில் தொற்று உருவாவதை தடுக்கும் நடவடிக்கைகள் என்னென்ன எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்தும் கேட்டறிந்தனர். மேலும் முறையாக சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என்றும் முக கவசம் அணிய வேண்டும் என வலியுறுத்தினர்.

Categories

Tech |