நெல்லையில் முழுமையாக கட்டாத மேம்பாலத்தை ஆய்வு செய்ய ரயில்வே பாதுகாப்பு ஆணையாளர் வருகை தந்து ஆய்வு மேற்கொண்டார்.
சென்னை முதல் கன்னியாகுமரி வரை இரட்டை ரயில் பாதை அமைக்கப்பட உள்ளது. அதன் முதல் பகுதியாக சென்னை முதல் மதுரை வரை ரயில் பாதை அமைக்கப்பட்டு பின் அங்கிருந்து நெல்லை வழியாக கன்னியாகுமரி வரை இரட்டை ரயில் பாதை அமைக்கப்பட உள்ளது.
தற்போது மத்திய அரசு வெளியிட்ட பட்ஜெட்டில் இதற்கான நிதி ஒதுக்கப்பட்டு உள்ளதால் விரைவில் பணி தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இரட்டை ரயில் பாதை அமைப்பதற்கு ஆங்காங்கே பாலங்களும் அமைக்கப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக திருநெல்வேலி மாவட்டம் கொர்குளம் பகுதியில் தாமிரபரணி ஆற்றின் மேல் பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இது முழுமையாக நிறைவடையாத பட்சத்தில் இதனை சோதனை செய்ய பெங்களூரில் இருந்து ரயில்வே பாதுகாப்பு ஆணையர் நேற்று காலை திருநெல்வேலிக்கு வருகை தந்த இவர், 10 மணி முதல் மதியம் 2 மணி வரை ஆய்வு மேற்கொண்டார்.