இந்தியாவில் மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய வந்தே பாரத் ரயில் சேவைகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்த வந்தே பாரத் ரயில்களை குஜராத், மகாராஷ்டிரா, இமைச்சல் பிரதேசம் மற்றும் டெல்லி ஆகிய 4 மாநிலங்களிலும் தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த 4 வந்தே பாரத் ரயில்களையும் பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிலையில் தற்போது 5-வது வந்தே பாரத் ரயில் சேவை குறித்த முக்கிய அறிவிப்பை தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
அதன்படி சென்னை, பெங்களூர், மைசூர் வழிதடத்தில் வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்பட இருக்கிறது. இந்த ரயில் சேவை வருகிற நவம்பர் மாதம் 10-ம் தேதி முதல் தொடங்குகிறது. மேலும் வந்தே பாரத் ரயில்கள் அனைத்தும் சென்னை பெரம்பூரில் உள்ள ரயில் பெட்டி தொழிற்சாலை மையத்தில் உள்நாட்டு உபகரணங்களை கொண்டு தயாரிக்கப்படும் நிலையில், நடப்பாண்டில் மட்டும் 27 வந்தே பாரத் ரயில்களை இயக்குவதற்கு திட்டமிட்டுள்ளனர்.