சென்னையில் உள்ள வி.ஆர். பிள்ளை தெருவில் ஒருவர் மூலம் 52 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் கொரோனாவின் மையப்புள்ளியாக தலைநகர் சென்னை இருந்து வருகின்றது. அங்கு மட்டும் 1,260 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் கொரோனா தடுப்பு பணி சிறப்பு அதிகாரியாக ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அனைவரும் மாஸ்க் கட்டாயம் அணிய வேண்டும்.
மாஸ்க் இல்லையெனில் துணியை முகக்கவசம் போல் பயன்படுத்தலாம். பேசும்போது சிலர் முகக் கவசத்தை கீழே இறக்கியபடி பேசுகின்றனர், அது தவறு அதிகாரிகள் உட்பட யாராக இருந்தாலும் பேசும்போதுகூட முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும். சென்னையில் வீடு வீடாக சென்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வாழும் மக்கள் அரசின் விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
சென்னையில் மூச்சுத் திணறல், காய்ச்சல், சளி, இருமல் இருப்பவர்கள் தாமாக பரிசோதனைக்கு முன்வர வேண்டும் கொரோனாவை ஒழிக்க மக்களின் ஒத்துழைப்பு மிகமிக அவசியம்.சென்னை மாநகராட்சியில் பாஸ் பெறுவது பற்றி இன்று விரிவான அறிவிப்பு வெளியிடப்படும். சென்னையில் நோய் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் வசிக்கும் 25% பேர் முகக்கவசம் அணிவதில்லை. திரு.வி.க. நகர், ராயபுரம், தண்டையார்பேட்டை, கோடம்பாக்கம் ஆகியவை சவாலான பகுதிகளாக உள்ளன.
தன்னார்வலர்கள் அனைவரும் தாமாக முன்வந்து 10 நாட்களுக்கு ஒரு முறை தங்களை பரிசோதித்துக் கொள்ள வேண்டும் நமக்கு கொரோனா வராது என அலட்சியத்துடன் யாரும் இருக்கக்கூடாது. சென்னை வி.ஆர். பிள்ளை தெருவில் ஒரு தன்னார்வலர் மூலம் 52 பேருக்கு கொரோனா கோயம்பேடு சந்தை தொழிலாளர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று தெரிவித்தார்.