Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள கடைகளை 15 நாட்களுக்கு அடைக்க உத்தரவு… காவல்துறை..!!

சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள கடைகளை 15 நாட்களுக்கு அடைக்க காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

அந்த பகுதியில் 100க்கும் மேற்பட்ட கொரோனா பாதிப்பு இருப்பதால் 200க்கும் மேற்பட்ட கடைகளை அடைக்க காவல்துறை உத்தரவிட்டுள்ளது. சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. சென்னையில் நேற்று ஒரே நாளில் 1,415 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 31,896 ஆக உயர்ந்துள்ளது.

அதில் குறிப்பாக ராயபுரம் மண்டலத்தில் 5,216 பேரும், கோடம்பாக்கத்தில் 3,409 பேர், திரு.வி.க நகரில் 2,922 பேர், அண்ணா நகரில் 3150 பேர், தேனாம்பேட்டையில் 3,844 பேர்,தண்டையார் பேட்டையில் 4,082 பேர், வளசரவாக்கத்தில் 1,395 பேர், அடையாறு மண்டலத்தில் 1,809 பேர், திருவொற்றியூரில் 1,171 பேர் என 9 மண்டலங்களில் பாதிப்புகள் ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்த நிலையில், மேற்கு மாம்பலம் பகுதிகளில் உள்ள கடைகளை கூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மக்கள் நடமாட்டத்தை குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Categories

Tech |