Categories
மாநில செய்திகள்

வேற லெவலில் மாறப்போகும் சென்னை…… “ஒரே கார்டில் மெட்ரோ ரயில், பேருந்து சேவை”…. இனி பயணிகளுக்கு டபுள் டிராவல் ஜாக்பாட்….!!!!!

சென்னையில் மெட்ரோ ரயில் சேவையானது நீல வழித்தடத்தில் விம்கோ நகர்  ,பணிமனை முதல் விமான நிலையம் வரையிலும், பச்சை வழித்தடத்தில் சென்னை சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரையிலும் இயங்கி வருகிறது. இதைத் தவிர புதிதாக 3 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவையானது விரிவுபடுத்தப்படுகிறது. இந்த சேவை 2026-ம் ஆண்டு முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து ஆணையம் மூலம் சிங்கிள் ஸ்மார்ட் கார்டு திட்டத்தை அறிமுகப்படுத்த தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது.

இந்த சிங்கிள் ஸ்மார்ட் கார்டு திட்டத்தின் மூலம் மெட்ரோ ரயில் மற்றும் மாநகர பேருந்துகளில் ஒரே கார்டை பயன்படுத்தி பயணிகள் பயணம் செய்யலாம். பேருந்துகளில் பணம் கொடுப்பதற்கு பதிலாக கார்டை பயன்படுத்தி ஒருமுறை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். இதனால் டபுள் டிராவல் என்ற முறையில் 2 வாகனங்களை பயன்படுத்திக் கொள்ளலாம். அதன் பிறகு தற்போது புதிதாக அமையவிருக்கும் பேருந்து நிலையங்கள் மற்றும் மெட்ரோ ரயில்களை இணைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கிளாம்பாக்கம் மற்றும் மாதவரம் ஆகிய பகுதிகளில் அமையும் புதிய பேருந்து நிலையங்கள் மெட்ரோ ரயில் சேவையுடன் இணைக்கப்பட இருக்கிறது.

இதனால் எந்த பகுதியில் இருந்து மெட்ரோ ரயில் சேவையில் வந்தாலும் பயணிகள் உடனடியாக பேருந்து சேவையை அணுக முடியும். ஆனால் இதில் சில சிக்கல்கள் இருப்பதால் சிறிய மாற்றங்களை கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மெட்ரோ ரயில் நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. மேலும் மெட்ரோ ரயில் சேவையுடன் தொடர்பில் இருக்கும் 22 பேருந்து நிலையங்களில் 7 சிறிய அளவிலான மாற்றங்கள் செய்யப்பட இருப்பதாக மெட்ரோ போக்குவரத்து கார்ப்பரேஷன் மேலாண் இயக்குனர் அன்பு ஆபிரகாம் கூறியுள்ளார்.

Categories

Tech |