சென்னையில் அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள ஸ்மார்ட் வகுப்பறைகளை முதல்வர் முக ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
ரூ.874 கோடி மதிப்பீட்டில் சென்னை அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரியில் ஆறு குளிர்சாதன வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள் மற்றும் 15 குளிர்சாதன வசதியுடன் கூடிய விடுதி அறைகளை முதல்வர் முக ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
1981ஆம் ஆண்டு தமிழ்நாடு சங்கங்களின் பதிவு சட்டம், 1975இன் கீழ் அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரி நிறுவப்பட்டது. மத்திய அரசின் பணியாளர் மற்றும் பயிற்சித்துறையாலும், தமிழ்நாடு அரசாலும் மாநில நிர்வாக பயிற்சி நிறுவனமாக செயல்படுத்தப்பட்ட அண்ணா நிர்வாகப் பணியாளர்கள் கல்லூரி அமைச்சுப் பணி முதல் அகில இந்திய பணி அலுவலர்கள் வரை அனைத்து தரப்பு அரசு அலுவலர்களுக்கும் பயிற்சி தரும் முதன்மை நிறுவனமாக விளங்குகிறது. அந்நிகழ்வில் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜனும் கலந்து கொண்டனர்.