Categories
மாநில செய்திகள்

சென்னையில் கொட்டி தீர்த்த கனமழை…. நள்ளிரவே களத்தில் இறங்கிய மேயர் பிரியா…. நடந்தது என்ன…..???

சென்னையில் நேற்று இரவு முதல் கனமழை கொட்டி தீர்த்தது. இந்த கன மழையால் ஒரு சில பகுதிகளின்‌ சாலைகளில், தெருக்களில் மழை நீர் தேங்கி நின்றாலும் சில இடங்களில் தண்ணீர்‌ஓடி செல்வதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் நேற்று நள்ளிரவை களத்திற்கு சென்றுவிட்டார். மழைநீர் தேங்கியுள்ள இடங்கள் அவற்றை விரைவாக வெளியேற்றப்படுவதற்கான நடவடிக்கை, மழை நீர் வடிகால் பணிகளின் செயல்பாடுகள் ஆகியவை ஆய்வு செய்தார். இது குறித்து அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு முக்கிய உத்தரவை பிறப்பித்தார். அதுவும் பழைய வண்ணாரப்பேட்டை, குறுக்குப்பேட்டை ஜி.பி. சாலை, அண்ணா சாலை, வால்டாக்ஸ் சாலை, பிரகாசம்‌ சாலை ஆகிய பகுதியில் நேரில் சென்று பார்வையிட்டார். அதன் பிறகு செய்தி அவர்களே சந்தித்து பேசிய அவர், முதல்வர் உத்தரவுபடி போர்க்கால அடிப்படையில் மழைநீர் வடிகால் பணிகளை முடித்துள்ளோம்.  வடகிழக்கு பருவமழை தொடங்கி இரவு 8 மணி முதல் நள்ளிரவு வரை 10 சென்டிமீட்டர் அளவிற்கு மழை பெய்துள்ளது.

துணை மேயர், ஆணையர் முதல் அனைத்து அதிகாரிகளும் களப்பணியாற்றி வருகிறோம். ஒவ்வொரு மாமன்ற உறுப்பினர்களும், அதிகாரிகளும் அவர்களது வார்டுகளில் ஆய்வு செய்து வருகிறார்கள். அதனை தொடர்ந்து பிரகாசம் சாலை உள்ளிட்ட பகுதியில் கடந்த ஆண்டு தண்ணீர் தேங்கி நின்றது. ஆனால் நட்பாண்டில் மழைநீர் வடிகால் மூலம் மழை நீர் சென்று கொண்டிருக்கிறது. இதனால் தண்ணீர் தேங்கி நிற்கும் சூழல் இல்லை. ஒரு சில இடங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. அங்கெல்லாம் மோட்டார் மூலம் விரைவாக மழை நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதனையடுத்து ஜிபி சாலையில் மழைநீர் தேங்கி நிற்பது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு‌ அவர்,அங்கு மழைநீர் ஓடும் வேகம் மிகவும் மெதுவாக செல்கிறது. அதுமட்டுமில்லாமல் அதிக அளவில் மழை நீர் கொட்டி தீர்த்து உள்ளது. மழையின் தீவிரம் குறைந்தும் வேகமாக மழைநீர் ஓடிவிடும் கடந்த ஆண்டு 2 அல்லது 3 நாட்கள் தண்ணீரை தேங்கி இருந்த நிலையில் தற்போது ஒரு மணி நேரத்தில் செல்லும் வகையில் ஏற்பாடுகள் செய்து உள்ளோம். ஒரு வேளை மாலை அதிகமானாலும் மழை நீர் வெளியேற்ற வடிகால்கள் சரியான முறையில் உதவி செய்யும். இதுதான் மழைநீர் வடிகால் பணிகளின் ரிசல்ட் சென்னை மக்கள் பாதிக்கப்படாத வகையில் சரியான நடவடிக்கை எடுப்போம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |