செல்போனில் பப்ஜி கேம் விளையாடி 16 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாவட்டம் சூலூர் பகுதியை சேர்ந்த கந்தவேல் என்பவர் சென்னை வண்டலூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது 16 வயது மகன் அருண் கடந்த சில நாட்களாக செல்போனில் பப்ஜி கேம் விளையாடி வந்துள்ளார். இதனால் மன நலம் பாதிக்கப்பட்டதை அடுத்து மனநல மருத்துவமனையில் கடந்த 2 மாதங்களாக சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் தனது குடும்பத்துடன் புஞ்சைபுலியம்பட்டி கள்ளிப்பாளையம் பண்ணை தோட்டத்தில் தங்கியிருந்த அருண் நேற்று மாலை கயிற்றால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த தகவலின்பேரில் உடலை கைப்பற்றிய போலீசார் அதனை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பிவைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். பப்ஜி கேம் மோகத்தால் சிறுவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.