Categories
கிரிக்கெட் விளையாட்டு

சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் விரைவில் புதுப்பிப்பு ….!!

நாட்டின் முன்னணி சர்வதேச தரம் வாய்ந்த கிரிக்கெட் மைதானங்களுள் ஒன்றான சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானம் விரைவில் புதுப்பிக்கப்படு கிறது.   கடைசியாக 2011-ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட்ட இந்த மைதானம் உலக கோப்பை தொடருக்காக 12 புதிய ஸ்டாண்டுகள் அமைக்கத் திட்டமிடப் பட்டது.

ஆனால் காலமின்மை மற்றும் இதர பிரச்சனைகளால் அவசரகதியில் 9 ஸ்டாண்டுகளே மட்டுமே கட்டப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் புதுப்பிக்கப்படுகிறது.  மேலும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துக்கும், மெட்ராஸ் கிரிக்கெட் கிளப்புக்கும் (எம்.சி.சி.) இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் எம்.சி.சி. ஸ்டாண்டு புதுப்பிக்கப்படவில்லை. ஐபிஎல் தொடருக்குப் பிறகு அதாவது மே மாதம் சேப்பாக்கம் மைதானம் புதுப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |