நடிகர் சேரன் தனது தாய் மற்றும் அக்காவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் நடிகராகவும் இயக்குனராகவும் வலம் வருபவர் சேரன். இவர் இயக்கத்தில் வெளியான பல படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இதை தவிர அவர் நடித்த ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து, பொக்கிஷம், யுத்தம் செய் உள்ளிட்ட படங்களும் பெரிதும் பாராட்டுப் பெற்றது.
அதன் பிறகு நடிகர் சேரன் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். இந்நிலையில் அவர் தனது தாய் மற்றும் அக்காவுடன் கோவிலில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதனுடன், தான் சிறுவயதில் தனது தாயின் கைகளைப் பிடித்துக்கொண்டு கோவிலுக்கு நடந்து சென்ற அனுபவத்தையும் குறிப்பிட்டுள்ளார்.
அம்மா கூட கோவிலுக்கு போவதில் ஒரு அலாதி சுகம் உண்டு… சிறுவயதில் அம்மாவின் கைபிடித்து அழகர்கோவில் சென்ற நான் இன்று என் கைகளை பற்றிக்கொண்டு அதே இடங்களில் அவர் நடந்தபோது என் மனதில் ஏற்பட்ட சந்தோசம் … எல்லா மகன்களும் இதை அனுபவிக்க வேண்டும்.. அருகில் இருப்பவர் எங்க அக்கா.. pic.twitter.com/kuGI5irPjN
— Cheran (@directorcheran) August 14, 2021