Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

செட்டிநாடு அயிர மீன் குழம்பு செய்வது எப்படி !!!

செட்டிநாடு அயிர மீன் குழம்பு

தேவையான பொருட்கள்:

அயிரை மீன் –  500 கிராம்

வெங்காயம் ‍ –  500 கிராம்

தக்காளி –  4

பூண்டு – 10 பல்

மிளகாய் – 6

கருவேப்பிலை –  தேவையான அளவு

கொத்தமல்லி இலை – தேவையான அளவு

எண்ணெய் – ‍ தேவையான அளவு

கடுகு  –  1/4 ஸ்பூன்

உ.பருப்பு –  1/2   ஸ்பூன்

வெந்தயம் –  1/4 ஸ்பூன்

மிளகாய்த்தூள்‍  – 2 தேக்க‌ர‌ண்டி

மல்லி தூள் – ‍ 2 மேஜைக்கரண்டி

புளி – சிறிய எலுமிச்சை அளவு

தேங்காய் ‍-  6 தேக்கரண்டி

உப்பு –  தேவைக்கு  ஏற்ப

தொடர்புடைய படம்

செய்முறை:

முதலில் ஒரு கிண்ணத்தில் அயிரை மீனுடன் உப்பு போட்டு  ஊற  விட வேண்டும். பின்னர்  தண்ணீர் விட்டு நன்றாக கழுவ வேண்டும். ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, உ.பருப்பு, வெந்தயம், கருவேப்பிலை, பூண்டு, வெங்காயம் , தக்காளி, உப்பு சேர்த்து வதக்கிக் கொள்ள  வேண்டும். பின் இதனுடன்  மிளகாய்த்தூள், மசாலாத்தூள்  ,  புளித்தண்ணீர் விட்டு கொதிக்க விட வேண்டும். மசாலா வாடை அடங்கியதும், மீனை போட்டு, 5 நிமிடம் கழித்து தேங்காய் , மல்லி தழை தூவி இறக்கினால் சூப்பரான செட்டிநாடு அயிர மீன் குழம்பு தயார் !!!

Categories

Tech |