Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள்

செட்டிநாட்டு சில்லி இறால் சுவைக்க ஆசையா…!! பாருங்க …!!

        செட்டிநாட்டு சில்லி இறால் செய்யும்  முறை 

தேவையான பொருள்கள்

இறால்– அரை கிலோ

மிளகாய் பொடி- ஒரு டீஸ்பூன்

தக்காளி– ஒன்று

மஞ்சள் பொடி– ஒரு டீஸ்பூன்

சோம்பு பொடி– அரை டீஸ்பூன்

இஞ்சி பூண்டு விழுது– அரை டீஸ்பூன்

வெங்காயம்– 2

பச்சைமிளகாய்-2

கறிவேப்பிலை– 2 கொத்து

எண்ணெய் -5 டேபிள்ஸ்பூன்

உப்பு– ஒன்றரை டேபிள்ஸ்பூன்

Image result for செட்டிநாட்டு சில்லி இறால்

 

செய்முறை

முதலில் இறாலை தோல் நீக்கி நடுவே உள்ள குடல் நீக்கி விட்டு சிறிது உப்பு சேர்த்து நன்றாக நான்கு முறை நீர் விட்டு கழுவ வேண்டும் .பிறகு அதனுடன் மஞ்சள் பொடி அரை டீஸ்பூன் மிளகாய் பொடி சோம்பு பொடி உப்பு இஞ்சி பூண்டு விழுது எல்லாவற்றையும் சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும் அதன் பின் வெங்காயம் தக்காளி மெலிதாக நறுக்க வேண்டும். பச்சை மிளகாயை சிறிது  துண்டாக நறுக்கவேண்டும்.

பின் அடுப்பில் வாணலியை வைத்து பாதி எண்ணெய் ஊற்றி இறால் கலவையை போட்டு வதக்க வேண்டும்.அடுப்பு  சிம்மில் இருக்க வேண்டும். நீர் முழுவதும் வத்திய  பிறகு இருக்க வேண்டும். வேறு வானிலையில் மீதமுள்ள எண்ணெய் ஊற்றி வெங்காயம் போட்டு வதக்க வேண்டும். நன்கு வதங்கியதும் பச்சை மிளகாய் சேர்க்கவேண்டும் மூன்று நிமிடம் வதக்கியதும். மீதமுள்ள அரை டீஸ்பூன் மிளகாய் பொடி சேர்க்க வேண்டும் .பச்சை மிளகாய் வாசனை போக கறிவேப்பிலை தக்காளி சேர்த்து நன்கு வதக்க வேண்டும் பிறகு இறால் சேர்த்து 10 நிமிடம் கிண்டி இருக்க வேண்டும்.

 இப்போது செட்டிநாட்டு சில்லி இறால் ரெடி

Categories

Tech |