Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

காரசாரமான செட்டிநாடு மிளகாய் சட்னி !!!

செட்டிநாடு மிளகாய் சட்னி

தேவையான பொருட்கள் :

வெங்காயம் – 4

வரமிளகாய் – 10

பூண்டு – 6

புளி – சிறிதளவு

பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை

எண்ணெய் – தேவையான அளவு

உப்பு – தேவையான அளவு

தாளிப்பதற்கு :

கடுகு – 1/4 டீஸ்பூன்

உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்

கறிவேப்பிலை – சிறிதளவு

நல்லெண்ணெய் – 2 டீஸ்பூன்

Chilli Chutney க்கான பட முடிவு

செய்முறை :

முதலில்  ஒரு  கடாயில்  எண்ணெய் ஊற்றி  வெங்காயம்,   பூண்டு, புளி, வரமிளகாய், பெருங்காயத்தூள் , உப்பு சேர்த்து வதக்கிக்  கொள்ள  வேண்டும். பிறகு அதனை மிக்ஸியில் போட்டு, சிறிது தண்ணீர் ஊற்றி, அரைத்து கொள்ளவும். ஒரு கடாயை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி, அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து சட்னியில் ஊற்றினால், செட்டிநாடு மிளகாய் சட்னி ரெடி!!!

Categories

Tech |