செட்டிநாடு இறால் பிரியாணி செய்முறை
தேவையான பொருள்கள்
இறால்– கால் கிலோ
பாசுமதி அரிசி– அரை கிலோ
எண்ணெய்– 150 கிராம்
நெய்– ஒரு டீஸ்பூன்
வெங்காயம்– 1
தக்காளி– 4
பச்சை மிளகாய் தூள்-ஒரு டீஸ்பூன்
மஞ்சள்தூள்– கால் டீஸ்பூன்
உப்பு தேவையான அளவு
எலுமிச்சை– 1
கொத்தமல்லி தழை -கால் கட்டு
புதினா -ஒரு கொத்து
பட்டை ஏலம் கிராம்பு– தலா ஒன்று
செய்முறை
எண்ணெயைக் காய வைத்து பட்டை கிராம்பு வெங்காயத்தைப் போட்டு நன்றாக வதக்கி இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு கிளறி விட வேண்டும் .பிறகு கொத்தமல்லி, புதினா, தக்காளி, பச்சைமிளகாய், அனைத்தையும் போட்டு 2 நிமிடம் வேக விடவும். மிளகாய் தூள் மஞ்சள் தூள் உப்பு போட்டு கிளரி தக்காளியை வேக விடவும். தக்காளி வெந்ததும் சுத்தம் செய்து வைக்கப்பட்டுள்ள இறாலை போட்டு அரை எலுமிச்சை சாரை பிழிந்து ஊற்றவும். இப்போது அரிசியை முக்கால் வேக்காட்டில் வேகவிட்டு அதில் அரை தேக்கரண்டி எண்ணெய் எலுமிச்சைச் சாறு சேர்த்து உடனே தாளித்து வைத்துள்ள கூட்டில் கொட்ட வேண்டும் பொட்டி தம்மில் விடவேண்டும். தம் போடுவதற்கு என்ற உள்ள தட்டை வைத்து அதன் மேல் பிரியாணி சட்டியை வைத்து மூடி போட்டு வடித்த கஞ்சி சட்டியை அதன் மேல் வைத்து 5 நிமிடம் விடவும் சிறிது கஞ்சி தண்ணீரில் சிவப்பு கலர் பொடியை கலந்து மேலே தூவினால் போல ஊற்றி நெய்யையும் ஊற்றி மறுபடியும் மூடி தம்மில் விட வேண்டும்.
இப்போது செட்டிநாடு இறால் பிரியாணி ரெடி