உலகின் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் ஹார்வார்டு பல்கலைக்கழகமும் ஒன்று. இந்தப் பல்கலைக்கழகம் சார்பாக நடத்தப்படும் கருத்தரங்குகள் மிக பிரபலமாகப் பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ஜனநாயக இந்தியாவில் சாதியும் அரசியலும் என்ற தலைப்பில் கருத்தரங்கு ஒன்று பிப்ரவரி 15ஆம் தேதி நடைபெறவுள்ளது. அமெரிக்காவில் மாணவர்கள் சார்பாக நடத்தப்படும் இந்த மிகப் பெரிய கருத்தரங்கில் சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகல் கலந்து கொள்ளவுள்ளார்.
ஹார்வார்டு வணிக பள்ளி மற்றும் ஹார்வார்டு கென்னடி பள்ளி மாணவர்கள் ஒன்றிணைந்து இந்த கருத்தரங்கை நடத்தவுள்ளனர். 2019ஆம் ஆண்டு நடைபெற்ற கருத்தரங்கில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். தொழிலதிபர்கள், அரசு அலுவலர்கள், சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என்று பல்வேறு துறையைச் சேர்ந்தவர்கள் இந்த கருத்தரங்கில் கலந்து கொள்வார்கள்.