கொரோனா நோய் தடுப்பு மருந்து இரண்டாவது டோஸ் எடுத்துக் கொண்ட பிறகு எதிர்ப்பு சக்தி உருவாக 4 அல்லது 6 வாருங்கள் ஆகும் என தெரிவித்துள்ளனர்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் 64 வயதான சுபாஷ் பாண்டே சுகாதார சேவைகள் இணை இயக்குனராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த வருடம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தன்னை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை எடுத்து வந்துள்ளார். பின்பு குணமடைந்து வழக்கம்போல் பணிக்குச் சென்று உள்ளார்.
அதன்பின் சென்ற மாதம் இறுதி வாரத்தில் சுபாஷ் பாண்டே கொரோனா தடுப்பூசியின் 2-வது டோஸை போட்டுள்ளார். அதன்பிறகு மீண்டும் அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு காய்ச்சல் மற்றும் லேசான இரும்பல் இருந்தது. இதையடுத்து ராய்ப்பூரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், கொரோனா தடுப்பு மருந்து இரண்டாவது டோஸ் எடுத்துக் கொண்ட பிறகு உடலில் எதிர்ப்பு சக்தி உருவாக 4 அல்லது 6 வாரங்களாகும். இந்த கொரோனா நோய்த்தடுப்பு சக்தியால் மீண்டும் தொற்று ஏற்படாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. ஆனால் கடுமையான தொற்றிலிருந்து பாதுகாக்கும் என்று தெரிவித்துள்ளனர்.