நான்கு கால்களுடன் பிறந்த கோழிக்குஞ்சை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள சொக்கம்பட்டி கிராமத்தில் பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாய தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் பெருமாள் தனது வீட்டில் எண்ணற்ற கோழிகளை வளர்த்து வருகின்றார். இதனையடுத்து இவருக்கு சொந்தமான கோழி ஒன்று குஞ்சு பொரித்துள்ளது.
இவ்வாறு அதில் பொரித்த ஒரு குஞ்சு மட்டும் நான்கு கால்களுடன் பிறந்துள்ளது. இதனையடுத்து நான்கு கால்களுடன் பிறந்த அந்த கோழிக்குஞ்சை சுற்று வட்டாரத்தில் வசிக்கும் அனைத்து பொதுமக்களும் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.