Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

அனைவரும் விரும்பிடும் “சிக்கன் கீமா பிரியாணி”

தேவையான பொருட்கள்

  • சிக்கன்                                             –  அரை கிலோ
  • பாசுமதி அரிசி                               –  2 கப்
  • மல்லி பொடி                                 –  3 மேசைக்கரண்டி
  • கரம் மசாலா பொடி                    –  3 தேக்கரண்டி
  • மஞ்சள் பொடி                               –  சிறிதளவு
  • தயிர்                                                  –  1 கப்
  • பச்சை மிளகாய் விழுது          –  1 தேக்கரண்டி
  • வத்தல் பொடி                               –  3 தேக்கரண்டி
  • ஏலக்காய்                                        –  5
  • கிராம்பு                                             –  3
  • பட்டை                                             –  சிறிய துண்டு
  • இஞ்சி பூண்டு விழுது                –  நான்கு தேக்கரண்டி
  • பிரியாணி இலை                        –  சிறிதளவு

செய்முறை

முதலில் பாசுமதி அரிசியை தண்ணீரில் போட்டு ஊற வைக்கவும்.

சிக்கனை கொத்துக்கறியாக வாங்கி நன்றாக சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும்.

சுத்தம் செய்த சிக்கனை வத்தல் பொடி, தயிர், கரம் மசாலா பொடி, உப்பு சேர்த்து நன்றாக கிளறி ஒரு மணி நேரம் குளிர்சாதனப் பெட்டியில் ஊறவைக்கவும்.

கடாய் ஒன்றை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் ஏலக்காய், பிரியாணி இலை, பட்டை, கிராம்பு போட்டு நன்றாக வதக்கவும்.

அதனுடன் இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய் விழுது சேர்த்து மேலும் வதக்கவும்.

பின்னர் ஊற வைத்துள்ள சிக்கனை எடுத்து அதையும் சேர்த்து நன்றாக வதக்கவும்.

வதக்கும் பொழுது வத்தல் பொடி, மல்லிப் பொடி, மஞ்சள் பொடி சேர்த்து கிண்டி நன்றாக வதக்கவும்.

நன்றாக வதங்கிய பின்னர் கரம் மசாலா பொடி போட்டு உப்பு சேர்த்து தேவைக்கேற்ப தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.

தண்ணீர் கொதித்து வருகையில் ஊற வைத்துள்ள அரிசியை சேர்த்து மூடிவிடவும்.

சாதம் வெந்தவுடன் இறக்கி சிறிது நெய் விட்டு பரிமாறலாம்.

சுவைமிக்க சிக்கன் கீமா பிரியாணி தயார்.

Categories

Tech |