நாகை அருகே தாய் சிக்கன் சமைத்து தராததால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாகை மாவட்டம் குத்தாலம் பகுதியை அடுத்த ஜெய ஜெ நகரைச் சேர்ந்தவர் ராஜா. இவரது தந்தை இராமச்சந்திரன். தாய் கொளஞ்சியம்மாள். கூலி தொழிலாளியான இவருக்கு மது அருந்தும் பழக்கம் உண்டு. இந்நிலையில் நேற்றைய தினம் தனது தாயாரிடம் சிக்கன் வாங்கி கொண்டு வந்து சமைத்து தருமாறு வலியுறுத்தி உள்ளார் ராஜா. ஆனால் தாயோ எனக்கு உடல்நிலை சரியில்லை என்றும்,
புரிந்து கொண்டு இன்று பொருத்துக்கொள், நாளை சமைத்து தருகிறேன் என்று கூறியுள்ளார். இதில் மனவேதனை அடைந்த ராஜா விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் பூச்சிக் கொல்லி மருந்தை எடுத்து குடித்துள்ளார். மயங்கி விழுந்த அவரை குடும்பத்தினர் உடனடியாக மீட்டு அரசு மருத்துவமனைக்கு தூக்கிச் சென்று சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.