சென்னை அண்ணா நகரில் சிக்கன் விற்க வந்த லெலிவரி பாயை நிராகரித்த சுங்க அலுவலர் சுத்தியலால் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அண்ணாநகர் பகுதியில் வசித்து வரும் தாமஸ் ராஜன் என்பவர் சுங்க அலுவலராக பணிபுரிந்து வருகிறார். தற்போது ஊரடங்கு காரணமாக இவர் தனது குடும்பத்தினருடன் நேரம் செலவிட்டு வருகிறார். நேற்றைய தினம், இரவு மர்ம நபர் ஒருவர் இவரது வீட்டின் கதவை தட்டியுள்ளார். தாமஸ ராஜன் திறந்து பார்த்த போது தலை கவசத்துடன் மர்ம நபர் ஒருவர் நின்று கொண்டு சிக்கன் டெலிவரி செய்ய வந்ததாக கூறியுள்ளார்.
இதற்கு தாமஸ் சிக்கன் எதுவும் ஆர்டர் செய்யவில்லை என்று கூற, இந்த வீட்டில் இருந்துதான் ஆர்டர் வந்தது ஒழுங்காக வாங்கிக் கொண்டு பணத்தை தருமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால் தாமஸ் ராஜன் விடாப்பிடியாக சிக்கனை வாங்க மறுத்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர் கையில் வைத்திருந்த தலைக்கவசத்தை கொண்டு கதவை பலமாக அடித்து தாக்கியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த தாமஸ்ராஜ் அந்த வாலிபரை கடுமையாக தாக்க, அவர் கையில் வைத்திருந்த கத்தியை எடுத்து அவரது காலில் பலமாக அடித்து விட்டு தப்பி ஓடி விட்டார். இதனால் பலத்த காயமடைந்த அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பின் இது குறித்து காவல் நிலையத்திலும் தாமஸ் புகார் அளித்தார். இவரது புகாரை ஏற்ற காவல்துறையினர் டெலிவரி செய்ய வந்த மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.