கோழிப்பண்ணைகளில் பறவைக்காய்ச்சல் பரவியதை அடுத்து ஃபெடரல் உணவு பாதுகாப்பு அலுவலகம் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை கோழிப் பண்ணைகளை மூட உத்தரவிட்டுள்ளது.
ஜெர்மனியில் மார்ச் 22ஆம் தேதி முதல் பறவைக்காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது. ஏற்கனவே பறவை காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கோழிகளை நேரடியாக விற்பனை செய்யாமல் மொபைல் கோழி வர்த்தகர்கள் மூலம் விற்கப்பட்டதால் இந்த நோய் ஜெர்மனியில் பல மாநிலங்களில் வேகமாக பரவியுள்ளது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக கோழிப் பண்ணைகளை மூட பெடரல் உணவு பாதுகாப்பு அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவானது ஏப்ரல் 30ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என தெரியவருகிறது. இந்த நோயினை கட்டுப்படுத்தும் விதமாக உள்நாட்டு கோழி மற்றும் கோழி மாமிசம் தொடர்பான ஏற்றுமதி கட்டுப்பாடுகள் சுவிசர்லாந்து முழுவதிற்கும் பொருந்தும் என கூறப்பட்டுள்ளது. இந்த உத்தரவால் 13 நகராட்சிகளில் கோழி பண்ணை விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் பாதிக்கப்பட்ட விலங்குகள் எதுவும் சுவிசர்லாந்து சட்டபூர்வமாக விற்கப்படுவதில்லை அது மறைமுகமாக தான் விற்கப்படுகின்றது. அதனால் தான் இவ்வளவு பிரச்சனை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் இந்த பறவை காய்ச்சல் மனிதனுக்கு பரவாது என்றாலும் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இது எடுக்கப்படுகின்றது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.