Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

பூரி , சப்பாத்திக்கு கொண்டைக்கடலை குருமா செய்து அசத்துங்க !!!

கொண்டக்கடலை குருமா
தேவையான பொருட்கள்:
கொண்டக்கடலை –  1 கப்
வெங்காயம் –  2
தக்காளி  – 2
இஞ்சி பூண்டு விழுது –  1 ஸ்பூன்
பட்டை , கிராம்பு , சோம்பு  – சிறிதளவு
தேங்காய் , சோம்பு விழுது  –   2 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் தூள் – தேவையான அளவு
மிளகாய் தூள்  -தேவையான அளவு
மல்லி பொடி – 1/2 ஸ்பூன்
எண்ணெய்  –  தேவையான அளவு
Chickpea க்கான பட முடிவு
செய்முறை:
முதலில் கொண்டைக்கடலையை  வேகவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும் . ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை , கிராம்பு , சோம்பு, வெங்காயம் போட்டு  வதக்கி  இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கிளறவும் .பின் தக்காளி சேர்த்து  உப்பு , மஞ்சள் , மிளகாய் தூள் , மல்லி பொடி , வேகவைத்த கடலை  மற்றும் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும் .பின்னர்  அரைத்த தேங்காய் சோம்பு விழுது போட்டு  மல்லி  இலை   தூவி  எண்ணெய்  தெளிய இறக்கினால் சூப்பரான  கொண்டைக்கடலை குருமா தயார் !!!

Categories

Tech |