Categories
உலக செய்திகள்

இனி 3 குழந்தைகள்…. அபாயத்தை உணர்ந்த சீனா…. நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதா….!!

சீனாவில் 3 குழந்தைகள் பெற்றுக் கொள்வது தொடர்பாக மக்கள் தொகை மற்றும் குடும்ப கட்டுப்பாடு சட்டத்தில் செய்யப்பட்ட சட்டத்திருத்த மசோதா அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சீனாவில் கடந்த 1976 முதல் 2016 வரை அனைவரும் ஒரு குழந்தைதான் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற திட்டம் நடைமுறையில் இருந்துள்ளது. இதனால் வயதானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வாலிபர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. அதோடு மட்டுமின்றி சீன அரசாங்கம் ஒரு அபாய எச்சரிக்கையும் உணர்ந்துள்ளது.

அதாவது இவ்வாறு இளம் வயதினரின் எண்ணிக்கை குறைந்துகொண்டே சென்றால் எதிர்காலத்தில் சீனா பல பிரச்சனைகளை சந்திக்கக்கூடும் என்பதாகும். இதனால் கடந்த மே மாதம் நடைபெற்ற மக்கள் தொகை கணக்கெடுப்பையடுத்து சீன அரசாங்கம் அந்நாட்டில் உள்ள அனைவரும் 3 குழந்தைகள் வரை பெற்றுக் கொள்ளலாம் என்ற அதிரடியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் தேசிய மக்கள் காங்கிரஸ் கட்சியின் நிலை குழுவினர்களின் மூலம் மக்கள் தொகை மற்றும் குடும்ப கட்டுப்பாடு சட்டத்தில் 3 குழந்தை பெற்றுக் கொள்வது தொடர்பாக திருத்தம் செய்யப்பட்ட மசோதா சீனாவிலுள்ள நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Categories

Tech |