முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் கைது விவகாரத்தில் விதைத்தது விளைந்திருக்கிறது என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கருத்து தெரிவித்துள்ளார்.
ஐஎன்எக்ஸ் வழக்கில் ஒரு நாள் முழுவதும் தேடப்பட்டு வந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மூத்த வழக்கறிஞருமான ப.சிதம்பரத்தை நேற்று இரவு அவரது இல்லத்தில் சுவர் ஏறி குதித்து சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர். இரவோடு இரவாக சிபிஐ தலைமை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு தற்போது வரை விசாரிக்கப்பட்டு வருகிறார். இதற்கு பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இதுகுறித்து கூறுகையில், சிதம்பரம் நிறைய தவறுகள் செய்திருக்கிறார். அவர் செய்த தவறுகளை தற்போது அவளுக்கு சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது. தவறுகள் செய்தால் தண்டனை அனுபவித்தே ஆக வேண்டும். மேலும் காங்கிரஸ் கட்சியினர் அனைவரும் ஏமாற்றுகாரர்கள் தான் என்றும், அந்த கூட்டத்தை ஒடுக்க மோடி அரசு சரியான நடவடிக்கையை எடுத்து உள்ளது என்றும் கூறிய அவர், அவர்கள் விதைத்தது தான் தற்பொழுது விளைந்திருக்கிறது என்று தெரிவித்தார்.