Categories
அரசியல்

“சிதம்பரம் கைது” மிக மிக தவறான நடவடிக்கை… மூத்த வழக்கறிஞர் தமிழ்மணி கருத்து..!!

பா சிதம்பரம் கைது செய்யப்பட்டது மிக மிக தவறான நடவடிக்கை என மூத்த வழக்கறிஞர் தமிழ்மணி தெரிவித்துள்ளார்.

ஐஎன்எக்ஸ் வழக்கில் ஒரு நாள் முழுவதும் தேடப்பட்டு வந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மூத்த வழக்கறிஞருமான ப.சிதம்பரத்தை நேற்று இரவு அவரது இல்லத்தில் சுவர் ஏறி குதித்து சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர். இரவோடு இரவாக சிபிஐ தலைமை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு  தற்போது வரை விசாரிக்கப்பட்டு வருகிறார். இதற்கு பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மூத்த வழக்கறிஞர் தமிழ்மணி இதுகுறித்து பேசுகையில்,

24 மணி நேரத்திற்குள் சிபிஐ நீதிமன்றத்தில் சிதம்பரத்தை ஆஜர்படுத்தப்படுத்தி அதன் கூடவே ஒரு மனு ஒன்றை அளிப்பார்கள். அதில், இவரை கஸ்டடியில் வைத்து விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைப்பார்கள். 7 நாள் அவசகாசம்கேட்கப்படும் பட்சத்தில் 1 முதல் 2  நாள் வரை நீதிமன்றம் சார்பில் அவகாசம் அளிக்கப்படும் என்று அவர் தெரிவித்த அவர், சிதம்பரம் கைது செய்யப்பட்ட நடவடிக்கை மிக மிக தவறான சட்ட நடவடிக்கை என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |