ப.சிதம்பரத்தின் மீது அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் முன்ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றத்தில் உத்தரவிட்டுள்ளது.
ஐ.என்.எக்ஸ் நிறுவன அந்நிய செலாவணி முறைகேடு வழக்கில் முன் ஜாமீன் கோரி முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அண்மையில் தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து டெல்லி உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக ப. சிதம்பரம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்ற நீதிபதி பானுமதி மற்றும் நீதிபதி ஏ.எஸ்போபண்ணா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இதில் சிபிஐ_யிடம் சிதம்பரம் ஏற்கெனவே கைதாகி விட்டதால் முன் ஜாமீன் மனுவை இப்போது விசாரிக்க வேண்டாம் என்று நீதிமன்றம் கூறிய நிலையில் அமலாக்கத்துறை வழக்கில் முன்ஜாமீன் வழங்க வேண்டுமென்ற வழக்கின் விசாரணை நடைபெற்றது.
இந்த விசாரணையில் ப.சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது என்று அமலாக்கத்துறையினர் தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்தனர். சிதம்பரம் தரப்பில் வழக்கறிஞ்சர் கபில் சிபில் ப.சிதம்பரம் தரப்பு நியாயங்களை முன்வைத்தார். வாதம் பிரதி வாதங்களை கேட்டறிந்த நீதிபதிகள் அமலாக்கத்துறை வழக்கில் ப.சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் பிறப்பித்து உத்தராவிட்டார்.இதனால் அவரை 26_ஆம் தேதி வரை கைது செய்ய கூடாது என்று வழக்கை 26-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
இதனால் ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறையினர் 26_ஆம் தேதி வரை அவரை கைது செய்ய முடியாது.ஆனாலும் அவர் சிபிஐ வழக்கில் கைது செய்யப்பட்டு 5 நாட்களை சிபிஐ காவலில் இருப்பதால் இந்த ஜாமீன் அவருக்கு பயனற்றதாகவே உள்ளது. எதோ சிபிஐ வசம் சிக்கிய சிதம்பரம் அமலாக்கத்துறையிடம் தப்பித்தார்.