Categories
தேசிய செய்திகள்

சிதம்பரத்தின் கைது தடை நீட்டிப்பு….. சற்று நிம்மதி அடைந்த காங்கிரஸ்…!!

ப.சிதம்பரத்தின் அமலாக்கத்துறை கைது தடையை நீடித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஐஎன்எக்ஸ் வழக்கில்  முன்ஜாமீன் கேட்டு டெல்லி உயர்நீதிமன்றம் மறுத்த நிலையில் அதற்கு மறுநாளே கடந்த 21_ஆம் தேதி  அவருடைய தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இறுதியில் அவர் சிபிஐயால் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வரும் நிலையில் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை தேவையற்றது என்று முன்ஜாமீனை இன்று உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்நிலையில் ஐஎன்எக்ஸ் வழக்கில் அமலாக்கத்துறை வழக்கில் கைது செய்து விட கூடாது என்று ப.சிதம்பரம் தரப்பில் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு மீதான விசாரணை நடைபெற்று வந்தது.இந்த வழக்கின் விசாரணையின் முடிவில் நீதிபதி பானுமதி ப.சிதம்பரத்தை நாளை மதியம் 12 மணி வரை கைது செய்ய கூடாது என்று கைது தடையை நீடித்துள்ளார். இதனால் காங்கிரஸ் கட்சி சற்று நிம்மதியடைந்துள்ளனர்.

Categories

Tech |