Categories
அரசியல் மாநில செய்திகள்

”ஜெ”க்கு எதிரான சீஃப் ஏஜெண்ட் OPS…. இனி கட்சியில் இடமில்லை…. சரவெடியாய் வெடித்த EPS …!!

அதிமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, ஜானகி அம்மா அணியிலே போட்டியிட்ட வெண்ணிறாடை உமா அவர்களுக்கு சீஃப் ஏஜெண்டா இருந்தவர் இந்த ஓ பன்னீர்செல்வம். அப்பவே அம்மாவை தோற்க அடிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி வேட்பாளருக்கு சீஃப் ஏஜெண்டா இருந்தவர் ஓபிஎஸ் அவர்கள். இவர் எப்படி கட்சிக்கு விசுவாசமாக இருப்பார் ? எப்படி ஆட்சிக்கு விசுவாசமாக இருப்பார் ?

ஆகவே தான் பொதுக்குழுவிலே ஒரே மனதாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அடிப்படை உறுப்பினர் என அனைத்து பதவிகளிலும் நீக்கி,  இனி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் அவரை இணைப்பதற்கு ஒரு சதவீதம் கூட இடம் கிடையாது.

எவ்வளவு வாய்ப்பை கொடுத்தோம். வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் அண்ணா திமுகவை வீழ்த்த பார்க்கின்றார். எவ்வளவு நாளைக்கு தான் பொறுக்குறது. சிந்தித்து பாருங்கள்..!  அதனாலதான் நம்முடைய கழக பொதுக்குழு உறுப்பினர்கள் ஒரே மனதாக அவரை அடிப்படை உறுப்பினர்,  அவருடைய பதவிகள் அனைத்தும் நீக்கி,  ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றி,  நீக்கப்பட்டு இருக்கும் செய்தியை இந்த நேரத்திலே தெரிவித்துக் கொள்கிறோம் என தெரிவித்தார்.

Categories

Tech |