Categories
மாநில செய்திகள்

விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் : தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை.!!

விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை நடத்தினார்.  

தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய 2 தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 21-ல் இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்களிடம் வீடியோ கான்பிரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனையில், பல்வேறு வழிகளில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதை முழுவதும் கண்காணித்து தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் பறக்கும் படைகள் கண்காணிப்பு குழுக்களை நியமிப்பது போன்ற பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொள்ள உள்ளது.

 Seithi Solai

அதுமட்டுமில்லாமல் விக்கிரவாண்டி மற்றும் நாங்நேரி இரண்டு சட்டமன்ற தொகுதி மட்டுமில்லாமல் விக்ரவாண்டி தொகுதி இருக்கும்  விழுப்புரம் மாவட்டம் முழுவதும் நாங்குநேரி தொகுதி இருக்கும் நெல்லை மாவட்டம்  முழுவதும் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.  இதற்கு முந்தைய இடைத்தேர்தலில் ஒரு தொகுதி மட்டுமில்லாமல் மற்ற பகுதிகளுக்கும் சென்று பணப் பட்டுவாடா செய்யக்கூடிய நிலை எல்லாம் ஏற்பட்டது. ஆகவே  இதனை தடுப்பதற்கு மாவட்டம் முழுவதும் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்த தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்த அறிவுறுத்தியுள்ளது.

Categories

Tech |