தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் பிரபாஸ் பாகுபலி என்ற திரைப்படத்தின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார். இவர் தற்போது ஓம் ராவத் இயக்கத்தில் ஆதிபுருஷ் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். ராமாயண காப்பியத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள ஆதிபுருஷ் திரைப்படத்தில், பிரபாஸ் ராமனாகவும், சைஃப் அலி கான் ராவணனாகவும், கீர்த்தி சனோன் சீதையாகவும் நடித்துள்ளனர். இந்த படத்தின் டீசர் சமீபத்தில் இணையதளத்தில் கேலிக்குள்ளானதோடு, பெரும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.
அதாவது ஆதிபுருஷ் திரைப்படம் ஒரு கார்ட்டூன் திரைப்படம் போன்று இருப்பதாகவும், ராவணனை ஒரு சர்வாதிகாரியை போன்று காட்டியுள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது. அதோடு பல்வேறு கதாபாத்திரங்களையும் தவறான முறையில் சித்தரித்துள்ளதாகவும் புகார் எழுந்தது. இதனால் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என பாஜகவினர் உட்பட பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு குரல் தெரிவித்துள்ளனர். மேலும் அயோத்தி ராமர் கோவிலின் தலைமை குருவும் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என தற்போது வலியுறுத்தியுள்ளார். இதனால் படத்துக்கு தடை விதிக்கப்படுமா என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
🏹 JAI SHREE RAM 🏹#NoOneCanStopAdipurush💥 #prabhas #adipurush pic.twitter.com/8fHEaVGlPI
— Prabhas FC (@PrabhasRaju) October 9, 2022