கொரோனா எதிரொலியால் டெல்லியில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லுரிகள் வரும் 31 ஆம் தேதி வரை மூடப்படும் என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கி உலகெங்கும் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸ் இந்தியாவிலும் குடியேறிவிட்டது. இந்தியாவில் 60க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றனர். மத்திய மாநில அரசுகள் கொரோனாவை தடுக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில் கொரோனா எதிரொலியால் டெல்லியில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லுரிகள் வரும் மார்ச் 31 ஆம் தேதி வரை மூடப்படும் என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். அதாவது, தேர்வு நடைபெறாத பள்ளிகள் மற்றும் கல்லுரிகள் திரையரங்குகள் மூடப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். அதேசமயம் பொதுமக்கள் ஓன்று கூடுவதை தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. முன்னதாக டெல்லி அரசு ஆரம்ப பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.