மூத்த அமைச்சர்களுடன் துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் அவரது இல்லத்தில் ஆலோசனை நடத்த உள்ளார்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. திமுக மற்றும் அதிமுக இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே அதிமுகவின் அடுத்த முதல்வர் வேட்பாளர் யார்? என்ற சர்ச்சை எழுந்துள்ளது.. கடந்த சில வாரங்களாகவே அதிமுகவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி வருகின்றது.. இது தமிழகத்தில் பேசு பொருளாகி வருகிறது.
முதல்வர் வேட்பாளர் யார்? என்ற விவாதம் எழுந்துள்ள நிலையில், மூத்த அமைச்சர்களுடன் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தற்போது அவரது இல்லத்தில் ஆலோசனை நடத்த உள்ளார்.. ஆலோசனை நடத்துவதற்காக மூத்த அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார் சிவி சண்முகம், செங்கோட்டையன் ஆகியோர் துணை முதல்வர் இல்லத்திற்கு விரைந்துள்ளனர்.. அடுத்த முதல்வர் ஓபிஎஸ் என ஆதரவாக போஸ்டர் ஒட்டப்பட்டுள்ள நிலையில், துணை முதல்வர் இல்லத்தில் ஆலோசனை நடத்தப்படவுள்ளது..