Categories
சினிமா தமிழ் சினிமா

“சீனு ராமசாமிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த முதல்வர்”…. ட்விட் பதிவு….!!!!!!

இயக்குனர் சீனு ராமசாமிக்கு இன்ப அதிர்ச்சி தரும் வகையில் முதல்வர் கடிதம் அனுப்பி உள்ளார்.

பிரபல இயக்குனராக வலம் வரும் சீனு ராமசாமி சென்ற 2007 ஆம் வருடம் வெளியான கூடல் நகர் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதன்பின் பல திரைப்படங்களை இயக்கி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். மேலும் தனது இரண்டாவது திரைப்படத்திலேயே தேசிய விருது பெற்று அனைவரையும் தன் பக்கம் திரும்பி பார்க்கச் செய்தார். இவர் இயக்கத்தில் அண்மையில் வெளியான மாமனிதன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் அவர் தனது பிறந்த பிறந்த நாளை கொண்டாடினார்.

அதற்கு அவருக்கு பரிசாக அவரின் மனைவி அவரின் கவிதைகள் அனைத்தையும் தொகுத்து நூலாக்கி கொடுத்திருக்கின்றார். இதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து மடல் எழுதியிருக்கின்றார். இது குறித்து சீனு ராமசாமி ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது, இலக்கியம் பெற்ற கவிதை மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கும் என்னை கண்டெடுத்து தென்மேற்கு பருவக்காற்றில் இந்த ஆதரவற்றவனை அடையாளம் காட்டிய ஆசான் வைரமுத்து அவர்களுக்கும் நேசமிகு அம்மா அவர்களுக்கும் தங்கை மரியசீனா ஜான்சன், எம்.ராமகிருஷ்ணன் அவர்களுக்கும் இதய நன்றிகள் எனக் கூறியுள்ளார்.

Categories

Tech |