மேட்டூர் அணையில் இருந்து குருவை சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடுவது குறித்து முதலமைச்சர் இன்று ஆலோசனை நடத்தி வருகிறார்.
தமிழகத்தின் நீர் ஆதாரமாக இருக்கும் மேட்டூர் ஆணைக்கு தண்ணீர் கர்நாடக மாநிலத்தில் தோன்றி சுமார் 860 கி.மீ பயந்து வங்காள விரிகுடாவில் கலக்கிறது. தமிகத்தில் சேலம், நாமக்கல், தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, கரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட12 மாவட்டங்கள் இந்த அணையில் இருந்து வரும் தண்ணீரை கொண்டு விவசாயம் செய்து வருகின்றனர். சுமார் 14 லட்சம் ஏக்கர் பயிர் சாகுபடி இதன் மூலம் நடைபெறுகிறது.
ஆண்டுதோறும் ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணையை திறப்பது வழக்கமாக உள்ளது. அணையிலிருந்து கடந்த 86 ஆண்டுகளில் ஜூன் 12ல் 16 முறையும், ஜூன் 12ற்கு முன்னர் 10 முறையும், ஜூன் 12ற்கு முன்னர் 60 முறையும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையின் மொத்த கொள்ளளவு 120 அடியாக உள்ள நிலையில், கிட்டத்தட்ட 90 அடிக்கு மேல் இருந்தால் மட்டுமே தண்ணீர் திறக்கப்படும்.
ஆனால் மேட்டூர் அணையை பொறுத்தவரை கடந்த 8 ஆண்டுகளாக தண்ணீர் திறக்கப்படவில்லை. போதிய தண்ணீர் இல்லாத காரணத்தால் திறக்காமல் இருந்தனர். தற்போதைய நிலவரப்படி அணையில் நீர்மட்டம் 100 அடியாகவும், நீர் இருப்பு 64.85ஆகவும் உள்ளது. 1,018 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் விவசாயிகள் சாகுபடிக்காக தண்ணீர் திறக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தது வரும் நிலையில்,
குருவை சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடுவது குறித்து சென்னை தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனையில் துணை முதல்வர் ஓபிஎஸ், அமைச்சர்கள் காமராஜ், துரைக்கண்ணு டெல்டா மாவட்ட அமைச்சர்கள், பொதுப்பணித்துறை வேளாண்துறை அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். இந்த ஆலோசனைக்கு பின்னர் மேட்டூர் அணை திறப்பது குறித்த முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.