Categories
அரசியல் மாநில செய்திகள்

முதல்வர் எடப்பாடி தான்…. முடிவெடுத்தது ஏன் தெரியுமா ? புது காரணம் சொன்ன ஸ்டாலின் …!!

6 மாதத்திற்குள் தமிழ்நாட்டை மொட்டை அடிச்சு முடிக்கணும்னு முடிவு பண்ணி எட்டப்பாடியை முதல்வராக தேர்வு செய்துள்ளனர் என முக.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

நேற்று திமுக நடந்த திமுக விழாவில் காணொளி மூலமாக பேசிய முக.ஸ்டாலின், நாட்டுல ஒரு பக்கம்  பொருளாதார நெருக்கடிகள், இன்னொரு பக்கம் கொரோனா தாக்குதல், இது ரெண்டுக்கும் மத்தியில பெரிய தொழில் நிறுவனங்கள் முதல் சிறு குறு தொழில்பாதிக்கப்பட்டு இருக்கு. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விதமான பாதிப்பு. நிறுவனங்களுக்கு வருமானம் இல்லை, தொழிலாளர்களுக்கு வேலை போச்சு, பலருக்கு வேலை பறி போச்சு, புதிய வேலைவாய்ப்பு எப்போ உருவாக்கும்னு தெரியல.

இந்த சூழல்ல பொது முடக்கம் காரணமா வாழ்வாதாரம் பாதிக்கப் பட்ட மக்களுக்கு 5000 குடுங்க கொடுங்க என்று நான் சொல்லிக்கொண்டே இருந்தேன். இதை இந்த அரசாங்க காது கொடுத்து கேட்கவில்லை. அதை கொடுக்கறதுக்கு மனசில்லை, இப்படிப்பட்ட மக்கள் விரோதிகள் கையில் தான் இந்த தமிழ்நாடு சிக்கி சீரழிந்து கொண்டு இருக்கு. அதிமுக என்கிற கொள்ளைக்கார ஆட்சிக்கு தலைமை தாங்க யார் தகுதியானவங்க என்கிறதுலதான் சமீபத்தில் சண்டை அந்த கட்சியில் நடந்துட்டு இருக்கு.

கொள்ளையர்களின் அரசர் எடப்பாடி பழனிசாமி தான் அப்படின்னு, அமைச்சர்கள்  எல்லாம் சேர்ந்து முடிவெடுத்தாங்க, ஏன் தெரியுமா ? இன்னும் ஆறு மாசம் இருக்கு. அதுக்குள்ள தமிழ்நாட்டை மொட்டை அடிச்சு முடிக்கணும்னு முடிவு பண்ணிட்டாங்க அதுக்காகத்தான். அதுக்கு பிறகு ஏதோ பெருசா சாதித்து விட்ட மாதிரியும், பன்னீர்செல்வத்தை வீழ்த்தியாச்சு அப்படிங்கற மாதிரியும் மகிழ்ச்சி அடைந்து திடீர்னு பழனிச்சாமி அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

அதிமுக என்ற கட்சியை தோக்க போகுது, தோக்க போகிற கட்சிக்கு யாரு முதலமைச்சர் வேட்பாளராக இருந்தால் என்ன ? அப்படின்னு பன்னீர்செல்வம் தன்னை மாட்டி விட்டதே தெரியாமல் பழனிச்சாமி மகிழ்ச்சியில் இருக்கிறார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டிருந்த அத்தனையும் பொய்கள் தான். பொய்களுக்கு கூடாரமாக பழனிசாமி மாறியிருக்கிறார் என முக.ஸ்டாலின் விமர்சித்தார்.

Categories

Tech |