Categories
அரசியல் மாநில செய்திகள்

அமித் ஷாவிடம் முதல்வர் மூன்று கோரிக்கைகள் …!!

இன்று சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் தமிழக அரசு சார்பில் முதல்வர் 3 முக்கிய கோரிக்கைகளை வைத்துள்ளார்.  கோதாவரி – காவிரி இணைப்பு காவிரி – குண்டாறு இணைப்பு திட்டங்களுக்கு ஒப்புதல் தர கோரிக்கை. அதே போல நடந்தாய் வாழி காவேரி திட்டத்திற்கான நிதியை விரைந்து விடுக்கவும் கடிதத்தில் முதல்வர் கோரிக்கை வைத்துள்ளார்.

நடந்தாய் வாழி காவிரி திட்டத்திற்கு 10 ஆயிரத்து 700 கோடியில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. தர்மபுரி, விருதுநகரில் மெகா டெக்டைல்ஸ் தொழில் பூங்கா அமைக்க வேண்டும். சென்னையில் ஏற்கனவே 2 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் திட்டம் வெற்றிகரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் இரண்டாம் கட்டமாக மெட்ரோ ரயில் திட்டத்திற்கான முதலீட்டை மத்திய அரசை 50 விழுக்காடு தர வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக முதலமைச்சர் வைத்திருக்கிறார்.

Categories

Tech |