கோவா மாநில முதல்வர் மனோகர் பாரிக்கர் மறைவையொட்டி இன்று ஒருநாள் நாடு முழுவதும் துக்கம் அனுசரிக்க படுகின்றது
கோவா மாநிலத்தின் முதல்வராக இருந்தவர் முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் (63 வயது ) . இவர் கடந்த ஒரு வருட காலமாக புற்றுநோயால் அவதிப்பட்டு இருந்தார் . இந்நிலையில் புற்றுநோயின் தாக்கத்திலும் கூட அவர் சட்ட பேரவைக்கு மருத்துவ சிகிக்சை கருவிகளுடன் வந்து தன்னுடைய பணியை தொடர்ந்தார் . இந்நிலையில் தொடர்ந்து ஒரு வருட காலமாக சிகிக்சை பெற்று வந்த மனோகர் பாரிக்கர் நேற்று உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் மனோகர் பாரிக்கர் மரணத்தையொட்டி இன்று ஒருநாள் நாடு தழுவிய துக்கம் அனுசரிக்க படுகின்றது. இதனால் தலைமை தேர்தல் ஆணையத்தின் கூட்டம் மற்றும் அனைத்து நிகழ்ச்சிகளும் ஒத்திவைக்கப்பட்டது. கோவா மாநிலத்தில் 7 நாள் துக்கம் அனுசாரிக்கப்படுகின்றது . மனோகர் பாரிக்கரின் உடல் இன்று மாலை அடக்கம் செய்யப்படுகின்றது.