உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் சிறப்பாக செயல்பட்ட 3 மாவட்ட ஆட்சியர்களுக்கு விருதுகளை முதல்வர் மு.க ஸ்டாலின் வழங்கினார்..
உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் வரக்கூடிய மனுக்கள் மீது பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு அந்த மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு வருகிறது.. இந்நிலையில் சென்னை தலைமைச்செயலகத்தில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய தூத்துக்குடி, அரியலூர், சேலம் ஆகிய 3 மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் முக ஸ்டாலின் விருதுகளை வழங்கி கெளரவித்தார்.