Categories
அரசியல் மாநில செய்திகள்

நடிகர் வடிவேலு இல்லாத குறையை தீர்க்கும் முதல்வர் MK Stalin.. செல்லூர் ராஜீ கிண்டல்..!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, முதலமைச்சர் ஜோக் அடிக்கிறார். ஜோக் அடிக்கும் போது சிரிக்க தான் வேண்டியதிருக்கிறது. இப்போது வடிவேலு இல்லாத குறையை அப்பப்ப திராவிட முன்னேற்ற கழகத்தினுடைய அமைச்சர்கள் தீர்த்து வைக்கிறார்கள். ஏனென்றால் முதலமைச்சர் நிமிஷத்துக்கு நிமிஷம் உழைக்கிறேன் என்கிறார், நிமிஷத்துக்கு நிமிஷம் போட்டோவுக்கு போஸ் கொடுக்கிறார், டிவியில் பேசுகிறார், டிவியில் வருகிறார். மாண்புமிகு முதல்வர் அவர்களே உங்கள் இதயத்தை தொட்டு சொல்லுங்கள்.

இதயம் என்று ஒன்று இருந்தால் நீங்கள் நிச்சயமாக நீங்கள் சொல்லுங்கள். அவருக்கு தகுதி இருக்கா ? தகுதி படைத்தவரா ?  படைத்தவர் இல்லையா என்பதை நீங்கள் மனசாட்சி படி சொல்லுங்கள். ஏதோ பத்திரிக்கையில் பேட்டி கொடுத்தோம் என்பதற்காக ஏதாவது ஒன்றை சொல்லக்கூடாது, மேடையில்பேசுறோம்னு பேசக்கூடாது. தேவை இல்லாமல் அதைத்தான் ஊடகப் பெருமக்கள் மத்தியில் இதையும் போட்டிருக்கிறார்கள், அவர் கோபப்பட்டார் என்று..

எங்கள் கட்சியை பற்றிய கேட்பதற்கு எங்களிடம் தானே கேட்க வேண்டும். திரும்ப அவர் போகிறார், இவர் போகிறார், இதை கேட்பதற்கு தான் நீங்கள் வந்திருக்கிறீர்களா? அப்போது தனியா வந்து அண்ணா திமுககாரர்களை பார்த்தால் உங்கள் கட்சியை பற்றி தான் கேட்கப் போகிறோம் என்று சொன்னால் நாங்கள் பேட்டியை கொடுக்கப் போவதில்லை.

ஒவ்வொரு மாவட்டமாக போய் நேர்காணல் நடத்தி, அவர்கள் ஆலோசனை என்ன சொன்னார்கள். மின்சார வாரியம் ஏன் கட்டணத்தை ஏற்றினார்கள். எதற்காக கருத்து கேட்பு கூட்டத்தை நடத்துகிறார்கள் ?  பேசாமல் அவர்களே கட்டணத்தை உயர்த்த சொல்கிறார்களா என திமுக அரசாங்கத்திடம் கேளுங்கள். மின்சார கட்டணம் உயர்ந்துவிட்டது,  கரண்டாவது ஒழுங்காக கொடுக்கிறார்கள் என்றால், அதுவும் கிடையாது, அதுவும் இல்ல, எப்போது வரும் ? எப்போது மின்சாரம் போகும் என்ற நிலை தான் திமுக ஆட்சியும் இருக்கு. இதுல திராவிட மாடல் என்று சொல்லிக் கொள்கிறார். என்ன மாடல் ?  மக்கள் மீது வரி சுமத்துவது தான் திராவிட மாடலா? என கேள்வி எழுப்பினார்.

Categories

Tech |