தமிழகம் மற்றும் புதுவையில் நீட் தேர்வை இரத்து செய்யவேண்டுமென்று புதுவை முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
மருத்துவ சேர்க்ககைக்கு நீட் தேர்வு நடத்தப்படும் என்று மத்திய அரசு சட்டமா இயற்றியது. இதற்க்கு தமிழகம் முழுவதும் மாணவரிடையே எதிர்ப்பு எழுந்து போராட்டம் கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றது. நீட் நடைபெற்ற மூன்று ஆண்டுகளுமே மதிப்பெண் குறைவு என்பதால் மாணவிகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவமும் அரங்கேறியுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இந்த ஆண்டுக்கான தேர்வு முடிவுகள் வெளியாகியது.
தேர்வு முடிவு வெளியானதையடுத்து குறைவான மதிப்பெண் காரணத்தால் திருப்பூரை சேர்ந்த ரிதுஸ்ரீ மற்றும் தஞ்சையை சேர்ந்த வைஷியா ஆகிய இரண்டு மாணவிகள் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் மீண்டும் தமிழகத்தை உலுக்கியுள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய புதுவை முதல்வர் நாராயணாசாமி , தமிழகத்தில் நீட் தேர்வு தோல்வியால் 2 மாணவிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் மற்றும் புதுவையில் நீட் தேர்வை இரத்து செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.