கொரோனா பெருந்தொற்று பரவ தொடங்கியதிலிருந்து நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பின்னர் நாட்டின் பொருளாதார வளர்ச்சி, மக்களின் வாழ்க்கை நிலையை கருத்தில் கொண்டு மத்திய – மாநில அரசுகள் தளர்வுகள் அறிவித்தன. சில நடவடிக்கைகளில் கட்டுப்பாடுகளும், பல நடவடிக்கைகளுக்கு தளர்வுகளும் ஒருசேர இருந்தன.
தமிழகத்தை பொறுத்தவரையும் இதே நிலைதான் தொடர்ந்தது. தமிழகத்தில் கட்டுப்பாடாக இருந்தாலும், சரி தளர்வாக இருந்தாலும் சரி அறிவிப்பதற்கு முன்பாக தமிழக முதல்வர், அரசு அதிகாரிகள், அமைச்சர்கள் மருத்துவ குழுவினருடன் ஆலோசனை ஈடுபடுவார்கள்.
அந்த வகையில் தற்போது தமிழகத்தில் மேலும் தளர்வுகள் அளிப்பது குறித்து வரும் 28ஆம் தேதி முதல்வர் பழனிசாமி சார்பில் ஆலோசனை நடத்த உள்ளார். மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவக் குழுவுடன் ஆலோசனை நடத்தி… தியேட்டர் திறப்பு, சென்னை புறநகர் ரயில் சேவை உள்ளிட்ட பல்வேறு தளர்வுகளை முதல்வர் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.