Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

அன்னைக்கு கண்டிப்பா திறக்கணும்… விரைந்து செய்யப்படும் பணிகள்… முதலமைச்சரின் உத்தரவு…!!

அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு பட்டு பூங்காவில் 25% பணியிடங்களை கொண்டு திறக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கீழ்கதிர்பூரில் அமைக்கப்பட்டிருக்கும் பட்டுப் பூங்காவை ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், தமிழக கைத்தறித் துறை அமைச்சர் ஆர்.காந்தி போன்றோர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளனர். பின்னர் பட்டு பூங்காவை சிறப்பாக செயல்படுத்துவது குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது. அப்போது தற்போது இருக்கும் பூங்காவை மேலும் 25 ஏக்கர் பரப்பளவில் 102 கோடியே 83 லட்சம் மதிப்பில் விரிவுபடுத்த முடிவு செய்துள்ளனர்.

இந்தப் பூங்காவின் மூலமாக வடிவமைப்பாளர்கள், சாயமிடுபவர்கள், கைத்தறி நெசவாளர்கள் மற்றும் கைத்தறி மதிப்பு இணைப்பில் தொடர்புடைய 18,000 நபர்களுக்கு நேர்முகமாகவும் அல்லது மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்க அதிகாரிகள் ஆய்வு கூட்டத்தில் விரிவாக விவாதித்து வந்துள்ளனர். அதனால் பூங்காவில் தோய்ச்சல், பட்டு சாயமிடுதல், கார்மென்டிங், கைத்தறி நெசவு போன்றவற்றிற்காக 82 தொழில் கூடங்கள் அமைக்கப்பட்டு வருகின்றனர்.

இதனையடுத்து இந்தப் பூங்காவை முதலில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தொடங்கி வைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து பட்டுப் பூங்காவில் நடைபெறும் பணிகள் குறித்து நேரில் சென்று ஆய்வு செய்யுமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்பின் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு பூங்காவில் முதல் நிலையாக 25% பணிகளுடன் திறக்கபட வேண்டும் என முதலமைச்சர் அதிகாரிகளிடம் கூறியுள்ளார். இதனால் அதிகாரிகள் பணிகளை கண்காணித்து விரைவில் நிறைவு பெற தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

Categories

Tech |