Categories
மாநில செய்திகள்

கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக அதிகாரிகளும் முதல்வர் பழனிசாமி ஆலோசனை!

கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.

தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,683 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்தவர்களில் மொத்தம் 752 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவானது மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. சுத்திகரிப்பு நிலையங்கள், இரும்பு, சிமெண்ட், பெயிண்ட் உள்ளிட்ட ரசாயன ஆலைகள், கரும்பு, உர கண்ணாடி, டயர், மிகப்பெரிய காகித ஆலைகள் ஆகியவை தொடர்ந்து இயங்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனிடையே 2020-21-ம் ஆண்டில் தமிழகத்தில் 34 மாவட்டங்களில் குடிமராமத்து பணிகளை மேற்கொள்ள ரூ.500 கோடி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

ஒரு புறம் மற்ற பணிகள் நடைபெற்று வந்தாலும் பல்வேறும் தடுப்பு நடவடிக்கைகளை தாண்டி கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தி வருகிறார். தொழில் நிறுவனங்களுக்கு படிப்படியாக அனுமதி வழங்குவது குறித்து முதலமைச்சர் முகாம் அலுவலகத்தில் நடைபெற்று வரும் ஆலோசனையில் அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

Categories

Tech |