சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.
ஜூன் 12ம் தேதி குருவை சாகுபடிக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி கடந்த வாரம் அறிவித்துள்ளார். மேலும் குடிமராமத்து பணிகளுக்காக தமிழக அரசு 67 கொடியே 24 லட்சத்து 75 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அதனடிப்படையில் 392 பணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு டெல்டா மாவட்ட விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
மேலும் தண்ணீர் திறக்கும் முன்னர் கடைமடை வரை நீர் செல்ல உடனடியாக தூர் வாரும் பணிகளை தொடங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதனை தொடர்ந்து குடிமராமத்து பணிகளை மேற்பார்வையிட்டு, ஆய்வு செய்து பணிகளை விரைவுபடுத்த தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, கரூர், திருச்சி, அரியலூர் மாவட்டங்களுக்கு 7 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த 7 ஐஏஎஸ் அதிகாரிகள் சிறப்பு கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்த வருகிறார். மேட்டூர் அணை திறப்பு, குடிமராத்து பணிகள் மற்றும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து இந்த ஆலோசனையில் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். சேலம் மாவட்ட ஆட்சியர் மற்றும் உயர் அதிகாரிகள் இந்த ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.