சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொளி மூலம் பல்வேறு திட்டப்பணிகளுக்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டியுள்ளார்.
நெடுஞ்சாலைத்துறை, வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சித்துறை, மற்றும் சிறு துறைமுகங்கள் துறையில் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். கன்னியாகுமரி – அஞ்சு கிராமத்தில் 480 அடுக்குமாடி குடியிருப்புகளை முதல்வர் திறந்து வைத்துள்ளார். பல்வேறு மாவட்டங்களில் ரூ.29.85 மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 13 பாலங்கள், அலுவலக கட்டிடங்களை திறந்து வைத்துள்ளார்.
நொய்யல் ஆற்றில் சரகம் 158.35 கி.மீ வரை விரிவாக்கம், புனரமைத்தல், நவீன மயமாக்கல் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டியுள்ளார். பொதுப்பணித்துறை சார்பில் ரூ.16.56 கோடியில் முடிவுற்ற திட்டப்பணிகள் திறப்பு, ரூ.17.01 கோடியில் திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியுள்ளார். மேலும் திருவண்ணாமலை மாவட்டம் தெள்ளூர், திருப்பத்தூர் மாவட்டம் சின்னராம்பட்டியில் தடுப்பணைகளை திறந்து வைத்துள்ளார். வேலூர் மாவட்டம் கருங்காலி, திண்டுக்கல் மாவட்டம் மம்மானியூர், திருப்பத்தூர் ஆமந்தகடலில் தடுப்பணைகளையும் முதல்வர் பழனிசாமி திறந்து வைத்துள்ளார்.